தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 கிலோ

பாஸ்மதி அரிசி - 3 கப்

நெய் - 5 தேக்கரண்டி

வெண்ணெய் - 3 தேக்கரண்டி

பிரின்ஞி இலை - 2

ஏலகாய் தூள் - இரு சிட்டிகை

பட்டை - 4

லவங்கம் - 5

சோம்பு - 1 தேக்கரண்டி

இஞ்சி - 1 பெரியது

பூண்டு - 1 பெரியது

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 10

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

புதினா - 1/2 கப்

கொத்தமல்லி இலை - 1/2 கப்

தக்காளி - 3

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 பெரியது

நெய் - 3 தேக்கரண்டி

செய்முறை

குக்கரில் எண்ணெய்,நெய்  விட்டு காய்ந்ததும் பிரின்ஞி இலை, சோம்பு,ஏலகாய் தூள் சேர்க்க வேண்டும்.  பின்னர் பட்டை, லவங்கம்,சோம்பு,இஞ்சி,பூண்டுஆகியவற்றை குக்கரில் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை  வதக்க வேண்டும்.  பின்னர்  வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பச்சை வாசனை  போகும் வரை  வதக்க வேண்டும். பின்னர்  மஞ்சள் தூள்,பாதி உப்பு,புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.  பின்னர் தக்காளியை அரைத்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கிய பின் கோழியை சேர்த்து வதக்கி கொண்டே இருக்க வேண்டும். மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து  தண்ணீர் விடமால் கோழியுடன் மசாலா நன்கு ஒட்டி சுருண்டு வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரிசி சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் விட்டு எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி விட வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து லேசாக கிளரி பரிமாற வேண்டும்.

Pin It