தேவையான பொருட்கள்:

கோழிக்கறி: 1 கிலோ
பெரிய வெங்காயம்: 2
தக்காளி: 2
நல்லெண்ணெய்: முக்கால் கப்
கிராம்பு: 3
மிளகாய் வற்றல்: 12
பட்டை: 2 துண்டு
இஞ்சி: 2 அங்குலம்
பூண்டு: 2
கடுகு: ஒரு தேக்கரண்டி
மிளகு: கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு: 12
சீரகம்: ஒரு தேக்கரண்டி
மல்லித்தழை: சிறிதளவு
மஞ்சள் தூள்: ஒரு தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு 

செய்முறை:
மிளகாய் வற்றல், பட்டை, கிராம்பு, கடுகு, சீரகம், மிளகு, பின் இஞ்சி, பூண்டு தனியாகவும், முந்திரிப்பருப்பைத் தனியாகவும் அரைக்க வேண்டும். கோழிக்கறியைச் சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள், உப்பு தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கறித்துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். மீதி எண்ணெயில் வெங்காயத்தை வெட்டிப் போட்டு வதங்கியதும் அரைத்த மசாலா போட்டு வதக்க வேண்டும். 


வாசனை வந்தவுடன் தக்காளியை வெட்டிப் போட்டு வதக்கி பிறகு கோழிக்கறியைப் போட்டு, பொடியாக நறுக்கிய மல்லி தழையையும் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி இளந்தணலில் வேக விட வேண்டும். கறி வெந்து தண்ணீர் வற்றி சாறு புரட்டினாற் போல் வந்தவுடன் இறக்க வேண்டும்.

Pin It