தேவையானவை:

prawn_curry_380இறால்.....................1 /2 கிலோ
காளான்...................200 கிராம்
குடமிளகாய்...........1
வெங்காய தாள்......3
பச்சை மிளகாய்.......3
தக்காளி.....................3
சோம்பு.......................1 /4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்........2
மிளகு ......................1 /4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி...........கொஞ்சம்
மிளகாய் பொடி...........1 தேக்கரண்டி
இஞ்சி, நறுக்கியது ......1 தேக்கரண்டி
பூண்டு நறுக்கியது ......1 தேக்கரண்டி
பெல்லாரி ...................2
வெங்காயம்................100 கிராம்
கறிவேப்பிலை............1 கொத்து
மல்லி தழை.................கொஞ்சம்
தேங்காய்......................4 ஸ்பூன்
முந்திரி...........................5
தேங்காய் எண்ணெய்...4 தேக்கரண்டி
உப்பு.............................தேவையான அளவு

செய்முறை:

இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுக்கவும். 1/2 கிலோ வாங்கினால், அதன் தோல், தலை போக, மீதம் 350 கிராம் இருக்கலாம். காளானையும் துடைத்து, கழுவி, நான்காக நறுக்கவும். பெல்லாரி, குடமிளகாய், வெங்காய தாளை கொஞ்சம் பெரிதாக வெட்டவும். சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி தழையை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சாய்வாக வெட்டவும். தக்காளியை, நறுக்கி, வதக்கி, அரைத்துக் கொள்ளவும். தேங்காய், முந்திரியை நன்கு அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் போடவும்.அது சிவந்ததும், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு சின்ன வெங்காயம் + பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், காளானைப் போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்த பெல்லாரி, குடமிளகாயை போட்டு லேசாக வதக்கி, அதிலேயே மிளகாய் பொடி, மஞ்சள்பொடி போட்டு வதக்கவும். பிறகு அரைத்ததக்காளி, தேங்காய் +உப்பு போட்டு வதக்கவும். நீர் விட வேண்டாம். இந்த மசாலா நன்கு வதங்கி கெட்டியானபின் அதில் இறாலைப் போட்டு வதக்கவும். இறால் வெந்தபின், தேவையான அளவு நீர் ஊற்றவும். மசாலா கேட்டியாகுமுன் நீர் ஊற்றினால், இறால் கறி சுவையாக இருக்காது.

நன்றாக நீர் வற்றி, மசாலா கெட்டியானதும், அதில் நறுக்கிய வெங்காய தாள், கறிவேப்பிலை , மல்லி போட்டு கிளறி இறக்கி விடவும். இந்த காளான் இறால் மசாலாவை சாம்பார் சாதம், பிரிஞ்சி சாதம், எலுமிச்சை சாதம் , தயிர் சாதம் எதனுடனும் தொட்டு சாப்பிடலாம்.

Pin It