தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் _ 1 1/2 கோப்பை(சிறு துண்டுகளாக நருக்கியது)
வெண்ணைய் _ 25 கிராம்
வெங்காயம் _ 1
காய்ச்சிய பால் _ அரை கப்
காய்கறித்தாள் _ ஒரு துண்டு
மிளகுத்தூள் _ கால் கரண்டி
கார்ன் ஃப்ளார் _ 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு _ தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தையும், பாதி காலிஃப்ளவரையும் பொடியாக அரிந்து கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் இதை நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். ஒரு பிரஷர் பானில் சிறிது வெண்ணையை சூடாக்கி அரிந்த வெங்காயம் காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிவரும் வரை தணலை அதிகமாக்கவும்.

நன்கு கொதி வந்ததும் மூடியால் மூடி வெயிட் வைத்து தணலை மிதமாக்கி ஒரு விசில் வரும்வரை வதக்கவும். பிரஷர் குறைந்ததும் ஒரு கப் பால், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். கார்ன் ஃப்ளார் எனப்படும் சோளமாவில் ஒன்றரை டேபிள் ஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். ஓரளவு பளபளவென வந்ததும் தேவையான அளவு மிளகுத்தூள், ஜாதிக்காள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.