தேவையான பொருட்கள்:

மிளகு - 4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
பூண்டு - 15 பல்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு

செய்முறை:

சின்னவெங்காயம், பூண்டு இரண்டையும் உரித்து முழுதாக வைத்துக் கொள்ள வேண்டும். வறுத்து அரைக்க வேண்டியவற்றை தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து கொள்ள வேண்டும். தேங்காய் வறுக்க மட்டும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் கொள்ள வேண்டும். வறுத்தவற்றை அரைத்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

வதங்கியபின் புளிக்கரைசல், உப்பு போட்டு அரைத்தவற்றையும் போட்டு கலக்க வேண்டும். சிறிது (1 கப்) தண்ணிர் சேர்த்து மூடி சிம்மில் வைக்க வேண்டும். கால் மணி நேரம் கழித்து எண்ணெய் விட்டவுடன் இறக்க வேண்டும். வத்த குழம்பு போல் பதத்தில் இறக்கிகொள்ள வேண்டும்.

 

Comments

1 comment

1
கி.பிரபா
மிளகு,புளி,சீரகம்,கருவேப்பிலை,பூண்டு,உளுத்தம்பருப்பு ஆகியவற்றில் சிறிதளவு எடுத்து எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடிசெய்து அவற்றை நீரில் கரைத்துப் பின் தேவையான உப்பு,மஞ்சள்பொடி,காயம் சேர்த்துக் கொதிக்கவை.
நன்றாக அல்வாபதம் வந்ததும் மேலும் பூண்டை வதக்கி,சுண்டைக்காய்,மணத்தக்காளி ஆகியவற்றையும் வதக்கிச் சேர்த்து நல்லெண்ணெய் நிறைய விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கு.பின் கருவேப்பிலை,சீரகம்,கடுகு போட்டுத் தாளித்து மூடிவை.
இக்குழம்பு ஊற்றி சோற்றைப் பிசைந்து உண்டால் கொண்டா,கொண்டா என நா ஊறும். கண்,தொண்டை,வயிறு ஆகியவற்றுக்கு மிக நல்லது.மலச் சிக்கல் வாரா.புளிப்பு ஏப்பம் ,காற்றுத் தொல்லை, உப்புசம் ஆகியவை இரா.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.