தேவையான பொருட்கள்:

ரவா - ஒரு கப்
மைதா - அரை கப்
அரிசிமாவு - அரை கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை சிறிது

செய்முறை:

ரவா, மைதா, அரிசி மாவு இவற்றுடன் சீரகம் மற்றும் உப்புச் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கி, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து இருந்து பிறகு எடுத்து தோசையாக ஊற்ற வேண்டும். தோசையைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு, பிறகு எடுத்துத் திருப்பிப் போட்டு வேகவிட வேண்டும். இரண்டு பக்கமும் நன்கு வெந்த பிறகு எடுத்துப் பரிமாற வேண்டும்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.