தேவையானவை:

பச்சரிசி குருணை/அரிசி...1 ஆழாக்கு
பச்சைப் பயறு/சிறுபயறு ... 1 /2 ஆழாக்கு
சீரகம்......................................1 ` தேக்கரண்டி
கீரை.. எந்தக்கீரையாக இருந்தாலும்...ஒரு கைப்பிடி
தேங்காய்...............................1 /2 மூடி
உப்பு தேவையான அளவு..
நீர்: அரிசி .............................4 :1

செய்முறை:

sirupayaru_kanchi_370அரிசியைக் களைந்து கொஞ்ச நேரம் ஊறவிடவும். பச்சைப்பையறை வாணலியில் சிவந்துவிடாமல் லேசாக வறுக்கவும்; கழுவவும். கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். சிறுகீரை/முருங்கைக் கீரை அசத்தலாக இருக்கும். தேங் காயை துருவி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து அரிசியை விட 4 பங்கு நீர் ஊற்றவும். நீர் கொதிக்கும் பொது அதில் அரிசி, பயறு, சீரகம் ,கீரை + உப்பு போட்டு மூடிவிடவும்.
குக்கர் 5 -6 விசில் விடும் வரை காத்திருந்து இறக்கவும்.  குக்கரில் கேஸ் போனபின் திறந்து துருவிய தேங்காயைப் போட்டு பரிமாறவும். இதற்குத் துணையாக தேங்காய்/ எள் துவையல் சூப்பராய் இருக்கும்.

எளிய சத்தான காலை உணவு. இரவிலும் உண்ணலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவசரமாக காலையில் டிபன் தயாரிக்கும் சகோதரிகள் ஒரு மாற்றாக இதனை தயாரிக்கலாம். நேரமும் குறைவு.

Pin It