கொல்காத்தாவின் ஒரு தெருவில் மகன் ஒருவன் தன் அப்பாவுடன் டாக்ஸியில் சென்றுக் கொண்டிருந்தான். அப்போது ரோட்டில் இருந்த சில விபச்சாரிகளைக் காட்டி அவர்கள் யார் என்று தன் அப்பாவிடம் கேட்டான். பையனுக்கு எப்படி அதை புரிய வைப்பது என்று தெரியாமல், அவர்கள் நடனக் கலைஞர்கள் என்று சொல்லி அப்பா சமாளித்தார். அதைக் கேட்ட டாக்ஸி டிரைவர்,

“ஏன் சார் பையங்கிட்டே பொய் சொல்றீங்க, தம்பி அவங்கெல்லாம் விபச்சாரிகள். பல ஆண்களிடம் தங்கள் உடலை விற்பவர்கள்” என்று சொன்னார்.

“விபச்சாரிகளுக்கு பிறக்கும் பிள்ளைகள் எல்லாம் என்ன ஆவார்கள் அப்பா” என்று பையன் கேட்க, டாக்ஸி டிரைவர் மீது கடுப்பில் இருந்த அப்பா சொன்னார்.

“டாக்ஸி டிரைவர் ஆகிவிடுவார்கள்”

Pin It