வெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக்கொண்டு ஆவியாவதால் உடல் சூடாகாமல் பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களுக்கு வியர்வை ஒரு பாதுகாப்பு அமைப்பு. ஆனால், பறவைகளுக்கு வியர்ப்பதில்லை. சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உடல்வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ள அவைகளின் அலகுகள் உதவுவதாக ஆஸ்திரேலியா, கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை ஆகஸ்டு மாத American Naturalist இதழில் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்பாக உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளின் அலகுகள் ஆராயப்பட்டன. 

bird_356வெப்பச்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளமாகவும், குளிர்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் குட்டையாகவும் காணப்படுகின்றன. பறவை அலகுகளின் அமைப்பு, தோற்றம் இவையெல்லாம்  உணவைப்பெறுவதற்காகவும், எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே என்கிற பழைமையான கருத்து இப்போது மெருகூட்டப்பட்டுள்ளது. பறவைகளுக்கு ஒரு ‘ரேடியேட்டரா’க அவற்றின் அலகுகள் செயல்படுகின்றன என்கிற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது. 

toucans, African barbets and tinkerbirds, Australian parrots, grass finches, Canadian gamebirds, penguins, gulls and terns உட்பட்ட 214 பறவையினங்கள் அவை வாழும் அட்ச, தீர்க்க ரேகை கோடுகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டன. அவை வாழும் வெப்பதட்ப நிலைக்கேற்ப அலகுகளின் நீளம் அமைந்திருந்தது. குளிர்ச்சியான சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளம் குறைவாக இருந்தன. 

சுருக்கமாகச் சொல்லப்போனால், பறவைகளின் அலகுகள் ஒரு ரேடியேட்டரைப் போன்று செயல்படுவதும், ரேடியேட்டர் தேவையில்லாத பறவைகளின் அலகுகள் நீளம் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. 133 ஆண்டு பழமையான ஆலன் விதியின்படி, உலகின் குளிர்பகுதிகளில் வாழும் விலங்குகளின் கைகள், கால்கள், வால், காதுகள் அனைத்தும் அளவில் சிறியனவாக இருக்கும். ஒரு பெரிய பறவைதொகுதியுடன் ஆலன் விதி முதன்முதலாக ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. 

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/06/100623104428.htm

Pin It