நல்ல பசி நேரத்தில் சூப்பர் மார்க்கெட் செல்பவர் வீடு திரும்பும்போது காலியான பர்சுடனும் பொருள் நிரம்பிய கேரிபேகுடனும் வருவதற்குக் காரணமென்ன?

பசியின்போது கிரெலின் என்றொரு ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இது மூளையை அடைந்ததும் சாப்பிட வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்துகிறதாம். மூளையில் பரிசுப் பகுதி என்றொரு பகுதியிருக்கிறது. இது செயல்படும்போது மனதில் ஒரு ஊக்கம் பிறக்கிறது. எப்பாடு பட்டாவது குறிப்பிட்ட பொருளை அடைந்து பரிசுப் பகுதியை செயல்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. பரிசுப் பகுதி செயல்பட்டால் மனதில் சந்தோஷம் பிறக்கிறது. இல்லாவிடில் ஏக்கம் பிறக்கிறது. பரிசுப் பகுதியை தூண்டிவிட்டு ஏக்கத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்வது கிரெலின்.

கிரெலினை செயல்படாமல் தடுத்தால் எலிகள் அதிக சாப்பாடு இருக்கும் அறையை நாடுவதில்லை. நாம் விருந்துகளில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்ட பிறகும் ஐஸ்கிரீம் சலாட் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நாடி அவற்றையும் ஒரு கை பார்ப்பது இந்த கிரெலின் தரும் தொந்தரவால்தான். கிரெலினை தடுக்க நாம் ஏதாவது செய்தால் பெருந்தீனி செய்யும் கொடுமைகளிலிருந்து தப்பிக்கலாம்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It