விக்கல் என்பது உதரவிதானம் அல்லது உந்து சவ்வைச் (diaphragm) சார்ந்தது. அது மார்பில் மூச்சை நெறிப்படுத்தும் தசை மென்தட்டாய் உள்ளது. அது மார்பிலிருந்து அடிவயிற்றையும் ஒலிப்பெட்டி (Voice box)யிலுள்ள குரல்வளை அதிர்வு நாளங்களிலிருந்தும் (Vocal cords) பிரிக்கின்றது.

திடீரெனத் தானாக விதானம் சுருங்கும்போது குரல்வளை அதிர்வு நாளங்கள் விரைவில் மூடுதலைச் செய்யும் நிலை ஏற்பட்டால் விக்கல் ஒலி உண்டாகிறது.

கழுத்திலிருந்து மார்புக்குச் செல்லும் வயிற்று விதானம் சார்ந்த நரம்புகள் (phrenic nerves) உதரவிதானத்தின் இரண்டு மெல்லிய இதழ்த் தகடுகளு(leaves)டன் இணைந்து மெல்லமைதியாகச் சுருங்கும். அப்போது அந்த நரம்புகளின் வழியில் ஏதாவதொரு இடத்தில் மென்மையாகவோ கடுமையாகவோ உறுத்தல் உண்டானால் விக்கல் விளையும்.

இதற்கான காரணம் தெளிவானது. இது பொதுவாக அபாயமற்றது. விக்கல்கள் பேருணவு உண்ட பின்போ அல்லது நிறைய வெறியூட்டும் போதைப் பருகு நீரைக் குடித்த பின்போ பொதுவாக நிகழும் அல்லது தோன்றும்.

சில அருமையான தனிப்பட்ட நேரங்களில் உதரவிதானத்தையோ அல்லது அதன் நரம்புகளையோ உறுத்தல் செய்யினும் விக்கல் விளையும். அந்த அருமையான தனிப்பட்ட சமயங்களாவன : (1) நுரையீரல் உறையின் அழற்சி (Pleurisy), (2) நுரையீரல் அழற்சி, (3) சில இரைப்பைக் கோளாறுகள், (4) கணைய வீக்கம், (5) வெறியூட்டும் பருகு நீர்மங்கள், (6) கல்லீரல் அழற்சி ஆகியவையாம்.

விக்கல் குறைவாகவும் இடையிடையேயும் வரும். அது தானாகவே நின்று விடும். சில நேரங்களில் தொடர்ந்து நீடிப்பதுண்டு. அப்படி நீட்டிப்புச் செய்தால் மாத்திரைகள் தந்து தடுக்க முயலக் கூடும். அறுவைச் சிகிச்சை தேவைப்படுமானால் அருமையாகச் செய்வதுண்டு. விதானத்தின் பாதியை நரம்புகளைக் கொன்று செயல் குறையச் செய்வதே அம்முறையாம். பெரும்பாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

வாயினுடைய கூரையின் பின் பகுதியை, நனைந்த பஞ்சால் ஒரு நிமிடம் மெல்லத் தடவினால் விக்கல் நிற்கக் கூடும் என மேயோ மருத்துவத் துறையின் அனுபவ மூலம் தெரிகிறது.

Pin It