உணவு செரிமானமாகும் தொடர் செய்கை முறை, சிக்கல் நிறைந்த நீண்ட விரிந்த செய்கைக்குட்பட்டதாகும். நாம் உண்ணும் உணவு பொடிக்கப் பெற்றுச் சிதைவுற்று வயிற்றில் சுரக்கும் சிலவகை அமிலங்களின் சேர்க்கையால் பதப்படுத்தப்பட்டாக வேண்டும். நம் இரைப்பை, முழுச் செரிவூட்டப்பெற செறிவடைந்த அய்ட்ரோ குளோரிக் அமிலத்தை (Concentrate Hydrochloric acid) உற்பத்தி செய்கிறது எனக் கூறுவது வியப்பாகக் கூடத்தோன்றலாம். அது நீரகமும் பாசிகமும் உள்ளடங்கலான ஓர் அமிலப் பொருளாகும். இயற்கை வரம்பற்ற தன் மெய்யறிவால் இந்த அமிலம் கொள்கலனின் சுவரைத் தின்னாமல் காப்புறுதியுடன் இருக்குமாறு இரைப்பையை உருவாக்கியுள்ளது.

ulcer_370முழுச் செறிவூட்டப் பெற்ற அய்ட்ரோ குளோரிக் அமிலம் வாழ்க்கை முழுதும் கடுமை தணியாமல் கொட்டிக் கொண்டிருந்தாலும் சிதைவின்றித் தாங்கி ஏற்குமாறு இரைப்பை யின் சவ்வின் உள்வரிப்பூச்சு வடிவமைக்கப் பட்டுள்ளது. அமிலம் மிகு உற்பத்தியாவதாலோ, வயிற்றுச் சவ்வுத் தர இழப்பாலோ, அல்லது இவ்விரண்டும் அமைவதாலோ சவ்வின் உள்வரிபப்பூச்சு சிதைவுறுகிறது. சிலவேளை களில் இன்னும் அறிய முடியாமலிருக்கும் காரணங்களும் அவ்உறைச் சிதைவை ஏற்படு தும். அதனால் இரைப்பையி மைந்துள்ள மெல் லிய தோலடுக்குகள் அடர்த்தியான அந்த அமில ஆற்றலுக்குட்பட்டு பாதுகாப்பிழக் ன்றன. எனவே சாதாரணமாய் இயற்கையாய் இரைப்பையிலமைய வேண்டிய சவ்வு உள்வரிப்பூச்சு, கீறல் விழுந்து சீர்குலைகிறது. இந்த உள்வரிப்பூச்சின் சீர்குலைவே குடல்புண்/ இரைப்பைப்புண்/ செரிமானப்புண் (peptic ulcer) எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது.

குடல்புண் ஓர் இயற்கை முழுதளாவிய பிணியாகும். இந்தக் கோளாறின் ஒரு காரணம் மட்டுமீறிய மிகை குருதி அழுத்தமாகும் (hypertension). தற்காலப் புதிய வாழ்க்கையமைப்பு முறையே இவ்விரு நோய்களுக்கும் காரணமாகும். நம்மில் பெரும்பாலோர் இரைப்பை மந்த உட்குத்தலைப் பெற்றாலும் ஒரு சிலருக்கே நிரந்தரமாக இரைப்பை சவ்வு உள்பூச்சுத் தேய்மானம் வளர்ந்து விடுவதுண்டு. இருப்பினும் இந்நோயால் தொல்லையுறுவோர் குறிப்பிட்ட உயர்விகிதத்தில் மருத்துவரை அணுகி வருகின்றனர்.

இந்தத் துன்பமுடையார்க்குரிய பொதுவான குறியீடுகளாவன: இரைப்பையில் வலிதொடங்கும். வயிறு உலைவு, அடி வயிற்றின் மேல் பகுதியில் பொருமல், உணவு உண்ட இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குப் பிறகு கீழ்ப்புற மார்பில் உலைவு ஆகியவை. நடுஇரவில் வயிறு காலியாக இருக்கும்போது கடுமை சற்றும் குறையாத அய்ட்ரோகுளோரிக் அமிலத் தாக்கத்திற்கு உட்பட்டிருத்தலால் அந்த அடையாளங்கள் தோன்றலாம். உணவோ, சிற்றுண்டியோ, அமிலத்தன்மைக்கு எதிரீடான மருந்தோ (antacid) உட்கொண்டால் அத்துன்பத்திலிருந்து நீக்கம் பெறலாம். ஆயினும் இரைப்பை காலியாகும்போது மீண்டும் சில மணி நேரங்களில் அந்நோய் தோன்றிவிடும். இவ்வாறான அடையாளங்கள் பெரும்பாலோர்க்கு ஏற்படுமாயினும் எல்லோர்க்கும் இவ்வடையாளங்கள் இருக்க வேண்டுமென்பதில்லை. சிலர்க்கு உணவு கொள்ளுதலே வலியை உண்டாக்கலாம். சிலருக்கு இரைப்பையில் உட்கனன்று எரியும் தீ போன்ற தன்மை உண்டாகி உலைவு தரப்படலாம்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்நோயை எளிதில் காண்முறை கண்டுள்ளனர். நார்க்கற்றையுடைய நெகிழ்ச்சியுடைய நுண்குழாயை வயிற்றினுள் நுழைத்து அதன் வழி காண்பர். உணவுக்குழாயின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றிலும் சிறிதும் ஐயமின்றி உட்செலுத்தி, வல்லுநர், உள் நிலையைக் கணித்தறிவார். இச்சிகிச்சை முறைக்கு என்டோஸ்கோபி (Endoscopy) என்றும் அதைக் கணித்துக் காண்பார்க்கு எண்டோஸ்கோபிஸ்ட் (endoscopist) என்றும் பெயர். இதற்கு ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து தங்க வேண்டுவதில்லை. 15 அல்லது 20 நிமிடங்களில், இந்நுண்குழாய்ச் சோதனை முற்றுப் பெறும். இச்சிறு குழாய்வழி காண்முறைக்கு முன்பு, எக்ஸ்ரே ஊடுகதிர் படம் எடுத்து நோயைக் கண்டுபிடிக்க முயன்று வந்தனர். குடலின் உட்பூச்சுக் கீறலில் புற்றுநோய் இருந்தால் இந்தப் படவழி அறிய இயலாமல் இருந்தது. ஆனால் நுண்குழாய்மூலம், சிறுகீறலில் இருந்து புண்வரை, எல்லாவற்றையும் தெளிவாய்க் கண்டறிய முடியும். புற்றுநோய்க் குறியையும் காண இயலும்.

உலகளாவிய நோயானதால் இதற்கு மருந்து காண பெருமுயற்சி எடுத்துள்ளனர். அய்ட்ரோகுளோரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாவதைத் தடுத்து சமன்படுத்த அமிலத் தன்மைக்கு எதிரீடான மருந்துகள் (antacid) கண்டனர். ஆனால் அது பலமுறை உண்ண வேண்டியதாயும் சிக்கலுடையதாயும் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் வலிமைமிக்க H—2, தடைகள் (H2 Blockers) கண்டுள்ளனர். மிகப் பயனுடையவை. நாள் ஓரிருமுறை பிற கிளை நோய்களை உற்பத்தி செய்யாதவை. இன்னொரு வகையில் இரைப்பையின் உட்பூச்சில் கீறல் விழாதவாறு இருக்க அதற்குரிய தன்னாற்றலை மிகுவிப்பதும் ஒரு வழியாகக் கண்டுள்ளனர். அவைகளும் மாத்திரைகளே. நோய் இன்னதெனக் கண்டபின் 6 அல்லது 8 வாரங்கள் தக்க மருந்து உட்கொண்டால் வயிற்றின் உட்பூச்சுக் கீறல் நீங்கி இயல்பான நிலை அடையலாம்.

ஆயினும் வருந்தத்தக்க செயல் என்னவென்றால், நிலைத்த நோய் நீங்கு மருத்துவம் குடல்புண் நோய்க்கு இதுவரை காண இயலாமையே. உணவை நெறிப்படுத்தல், கள் முதலிய போதைப் பொருள்களை நீக்கல், ஏஸ்பிரின் போன்ற மாத்திரைகளை உண்ணாமை, சிகரெட் பீடி பிடிக்காமை, காபி, டீ குடியாதிருத்தல் இந்த நோயைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.

தொடர்ந்து துன்பம் தந்தால் அறுவைச் சிகிச்சையே இதற்கு வழி.

Pin It