உடலிலுள்ள சில குறிப்பிட்ட நுண்ணிய அறைகள் (Cells) மிகை உணவைக் (surplus food) கொழுப்பு அல்லது விலங்கு மாவுச் சத்து (animal starch) வடிவில் சேமித்து வைக்கின்றன. உடலின் தேவைக்கேற்ற சக்தியை குருதியானது போதுமான அளவு கொடுக்க இயலாதபோது இந்தக் கிடங்கிலிருந்து எடுத்துக் கொள்ளும்.

corpuscle_370நாம் உண்ணும் சில பொருட்கள் நேராக உடலிலுள்ள நுண்மை அறைகளால் பயன்படுத்திக் கொள்ளப்படும். ஆனால் தேவையான சக்தியை வழங்குவதற்கு முன்பு அவைகள் வேதியியல் மாற்றங்கள் பெற்றாக வேண்டும். இந்த மாற்றமடையும் நிலையைச் செரித்தல் அல்லது ஜீரணித்தல் என்கிறோம். இது இரைப்பையிலும் சிறு குடலிலும் நிகழ்கிறது. செரிக்கப்பட்ட உணவு இங்கிருந்து நுண்ணிய அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

செரிக்கப்பட்ட சர்க்கரை, புரதம், மாவுச்சத்துக்கள் ஆகியவை நீரில் கரைந்து குருதியில் கலப்பதற்கு ஏற்றவாறு மாறி, குருதியோட்டத்தில் கலக்கிறது. எனவே அவ்வாறு கலந்த குருதி ஒரு நிமிடத்திற்கும் குறைந்த கால அளவில் உடல் முழுவதும் சுற்றலாகிறது. குருதியோட்டத்தில் செரித்த கரைந்த நீருணவு சேர்ந்த உடனே அந்த உணவு குருதியிலுள்ள சிவப்பு அணுக்கணங்களின் (Corpuscles) உதவியால் உடலிலுள்ள எல்லா நுண்ணிய அறைகளுக்கும் மிக விரைவாக வழங்கப்படுகிறது.

இந்த வழங்கலில் உணவு குறையும்போது நுண்ணறைக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவு செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

(உடலும் மருந்தும் நூலிலிருந்து)

Pin It