உண்பதற்கு உணவில்லாமல், உடுத்துவதற்கு மாற்று ஆடையில்லாமல், குடிக்க நீரில்லாமல், நாளை என்னவாகுமோ என்கிற வேதனையில் 3,20,000 ஈழத் தமிழர்கள் அகதிகளைப் போல் சொந்த நாட்டிலேயே மின்வேலிக் கம்பிகளின் இடையே திறந்த வெளியில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். சுற்றிலும் ஆயுதமேந்திய சிங்களக் காடையர்கள். இந்த அவல நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க ஒருமித்த சிந்தனையோடும், உரத்த குரலோடும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலில் ஒரு திருப்பு முனையை உண்டாக்க ஒன்றிணைவோம். 

அமெரிக்க நாட்டைச சேர்ந்த மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகத் தமிழ் அரசியல் செயல்பாட்டுக் கவுன்சிலின் துணைத் தலைவரும், மனித உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் வீராங்கனை டாக்டர் எலைன் சான்டர் (Dr. Ellyn Shander) நம்மிடையே உரையாற்ற இருக்கிறார். தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாகக் கூட்டத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தலைமை 

மருத்துவர் இராமதாசு அவர்கள்

நிறுவனத் தலைவர், பா.ம.க. 

சிறப்புரை 

திரு பழ.நெடுமாறன் அவர்கள்,

தலைவர், தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கம்
 

திரு.வைகோ அவர்கள்,

பொதுச் செயலாளர், ம.தி.மு.க.

 

திரு தா.பாண்டியன் அவர்கள்,

சி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு

 

திரு. ம.நடராசன், ஆசிரியர்

புதியபார்வை

 

திரு. துரை அரசன் அவர்கள்,

மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்

 

நாள் : 10.10.2009

நேரம் : மாலை 5.30 மணியளவில்

இடம் : மயிலை மாங்கொல்லை, மயிலாப்பூர், சென்னை.

நிகழ்ச்சிகள்:

ஐந்து கோவிலான் இயக்கத்தில் தமிழ் ஈழ ஆதரவு திரைப்பட உதவி இயக்குனரின் கருப்புக்குரல் நாடகம்


வரவேற்புரை
 

திரு.இளங்கோவன், மாவட்ட செயலாளர்,

தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கம்

 

நன்றியுரை

திரு.மனோஜ்குமார் அவர்கள்,

திரைப்பட இயக்குனர்

Pin It