தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

கவிதை

--------

சாத்தானும் சிறுமியும் - யூமா வாசுகி

பாம்பாட்டி தேசம் - கரிகாலன்

சிறுகதை

---------

பிணங்களின் கதை - கவிப்பித்தன்

மெல்பகுலாஸோ - மாதங்கி

நாவல்

-------

கருடகம்பம் - இளஞ்சேரல்

மகாகிரந்தம் - எச்.முஜீப் ரஹ்மான்

சிறப்பு விருது

------------

நான் வடசென்னைக்காரன் - பாக்கியம் சங்கர் (கட்டுரைகளால் ஆன கதைகள்)

லண்டாய் - ச.விசயலட்சுமி (வலியும் வாழ்வும் - ஆஃப்கான் பெண்கவிகளின் கவிதைகளும் வாழ்க்கையும் ஆங்கிலம் வழி தமிழில்)

நிகழ்கலையில் நான் - கமலாதேவி அரவிந்தன் (இலக்கிய, நாடக வாழ்நாள் பயணத்தை முன்வைத்து)

விருது பெறும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

பங்கு பெற்ற படைப்பாளிகள், பதிப்பகத்தார், வாசகர்கள், இலக்கிய நண்பர்கள், தேர்வுக் குழுவில் பங்கேற்று உதவிய நடுவர்கள் அனைவருக்கும் செந்தமிழ் அறக்கட்டளை சார்பாகவும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக் குழு சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பரிசளிப்பு விழா 18-10-2015 ஞாயிற்றுக் கிழமை, காலை 10-00 மணிக்கு ரஷ்ய கலாச்சார மையம் ( கஸ்தூரி ரங்கன் சாலை) அரங்கில் நடைபெறுகிறது.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

-    செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை

Pin It