water poovulagu 1

பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட பொது குடிநீர்
தண்ணீர் என்பது ஒரு வளம். அது ஒரு விற்பனை பண்டம் அல்ல.

பொது இடங்களில் பொதுமக்களுக்கான பாதுகாக்கப்பட்ட பொது குடிநீர் என்பது இன்று வெளிப்படையாகவே மறுக்கப்பட்டு வருகிறது. குடிநீருக்கு விலைக்கொடுக்க இயலாத ஏழைகளுக்கு இன்று பொது இடங்களில் விலையில்லாமல் குடிநீர் கிடைப்பதில்லை. குறிப்பாக பேருந்து நிலையங்களில் அரசு தன் புட்டிநீர் விற்பனையை தொடங்கிய பிறகு பொது குடிநீர் ஏறக்குறைய புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

எங்கோவொரு மூலையில் பெயருக்கு வைக்கப்பட்டுள்ள பொதுக்குடிநீர் குழாயை தேடிக் கண்டுப்பிடிப்பது புதையலைத் தேடி கண்டுப்பிடிப்பது போல் இருக்கிறது.

பல பேருந்து நிலையங்களில் பொது குடிநீர் அறவே இல்லை. பெரிய நகரங்களின் பேருந்து நிலையங்களில் ஒவ்வொரு பிரிவிலும் ‘அம்மா குடிநீர்’ விற்பனைக் கூண்டு இருக்கிறது. இந்த கூண்டமைக்க இடம் கிடைக்கையில் அப்பிரிவுகள் அனைத்திலும் பொது குடிநீரை வைப்பதற்கு மட்டும் ஏன் இடம் கிடைப்பதில்லை?

பொது இடங்களில் பாதுகாப்பான குடிநீர் - துவக்கம்
தண்ணீர் என்பது நமது அடிப்படை உரிமை - இலக்கு

பொதுநீருக்காக ஒன்றிணைவோம் ...

ஏப்ரல் -19 , ஞாயிறு, மாலை 4.30 மணி
சென்னை புத்தக சங்கமம் மேடை , YMCA மைதானம் , இராயப்பேட்டை, சென்னை

துவக்கி வைப்பவர், இந்தியாவின் தண்ணீர் மனிதன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்.

வாருங்கள் நம்முடைய அடிப்படை உரிமையை மீட்டு எடுப்போம்

பொது நீருக்கான பொது மேடையில் இதுவரை இணைந்துள்ளோர்…

பூவுலகின் நண்பர்கள், மே 17 இயக்கம், இளந்தமிழகம், குக்கூ, அணுசக்திக்கெதிரான மக்கள் கூட்டமைப்பு, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு, திராவிடர் விடுதலை கழகம், தளிர்கள் தர்மபுரி, ஐந்திணை வாழ்வியல் நடுவம், ஓசூர் அன்புக்கரங்கள், நாணல் நண்பர்கள் மதுரை, தண்ணீர் அமைப்பு, பாலாறு பாதுகாப்பு இயக்கம், சேலம் மக்கள் குழு, அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், தற்சார்பு விவசாயிகள் இயக்கம், பச்சைத்தமிழகம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், இளைஞர் இயக்கம், தண்ணீர் இயக்கம், சமூகக்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழகம், செம்படுகை நன்னீரகம்புதுவை, புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்புநிலக்காடுகள் அபிவிருத்தி சங்கம், பசுமை நண்பர்கள், சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்.....
பட்டியல் முடிவு பெறவில்லை. தொடரச் செய்வோம்…

Pin It