மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், மனித உரிமைப் போராளியுமான மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களின் நினைவு சொற்பொழிவு வரும் 9.11.2014 ஞாயிற்றுக்கிழமை, சென்னை, தி.நகரில் திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள வித்யோதா பள்ளி அரங்கில் காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெற உள்ளது.

இச் சொற்பொழிவு நிகழ்வில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வரும், முன்னாள் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு.விக்னேஸ்வரன் “பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதுகாத்தல்” (SAFEGUARDING SECURITY AND SOVEREIGNTY) என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

மறைந்த கே.ஜி.கண்ணபிரான் அவர்களுக்கு மரியாதையினை செலுத்தும் வகையிலும், மேலும் அசாதாரண‌ சூழலில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்ற பின் இந்தியாவில் நீதிபதி விக்னேஸ்வரன் பங்கேற்கும் முதல் நிகழ்வாகவும் இந்த நிகழ்வு அமைய உள்ளது.

எனவே தோழர்கள் மற்றும் சனநாயக ஆர்வலர்கள் இந் நிகழ்வில் பங்கேற்று தோழமையினை வழங்க வேண்டுமாயும் அன்புடன் கோருகிறோம்.

- ச.பாலமுருகன், பொதுச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

Pin It