1977முதல் 2002வரை தருமபுரி மக்கள் யுத்தக் கட்சியின்[நக்சலைட்] கோட்டையாக இருந்தது. இக்கட்டத்தில் பல சாதி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. சாதிகலப்பு திருமணங்கள் சர்வ சாதரணமாக நடைபெற்றன.

2002 ல் ஊத்தங்கரையில் நடந்த போலிசுடனான கடும் மோதலுக்கு பிறகு இயக்கம் முற்றிலும் பின்னடைந்தது. இன்றுவரை எந்தவித செயல்பாடுகளும் தொடங்கவில்லை. இந்த பின்னணியை பயன்படுத்திதான் வன்னியசாதி வெறிசக்திகளும் பா. ம. க. சாதிவெறி கட்சியும் திவ்யா-இளவரசன் காதல் சிக்கலை சாதிகலவரமாக மாற்றினர். நத்தம்-அண்ணாநகர்-கொண்டம்பட்டி கிராமங்கள் சூறையாடப்ப்ட்டன.

kolathoormani dharmapuri marriage

இச்சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிக்கசாதி உழைக்கும் மக்கள் மத்தியில் சாதிவெறியையும் தாழ்த்தபட்டவர்கள் மத்தியில் அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.

இந்த காலச்சூழ்நிலையில், இச்சூழ்நிலைமீது அதிர்வை ஏற்படுத்தவேண்டும், கலகத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் மக்கள் சனநாயக குடியரசு கட்சி தருமபுரியில் சாதிமறுப்பு திருமணத்தை நடத்த முடிவு செய்தது.

இக்காலச்சூழலும் இடமும் இந்நிகழ்ச்சியில் முக்கிய பங்கை வகித்தன. திருமணம் என்ற பண்பாட்டு நிகழ்வே அரசியல் நடவடிக்கையாக மாற்றப்பட்டன. பல முக்கிய தலித் கிராமங்களில் பிராச்சரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் அச்சங்கள் போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல இடங்களில் சுவரொட்டிகள் சாதி வெறியர்களால் கிழிக்கப்பட்டன. நிகழ்ச்சி நடத்த அனுமதி முதல்நாள் வரை கேள்விக்குறியாக இருந்தது.

இறுதியில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.

தருமபுரி மாவட்டத்தின் உயரமான மலையான மூக்கனூர் மலையின் அடிவாரம் செங்கொடிகளால் சிவந்தது. வாழ்க்கை இணை ஏற்பு விழாவிற்கு மக்கள் சனநாயக குடியரசுகட்சியின் பொது செயலாளர் தோழர் பழனி தலைமை தாங்கினார்.

தோழர் துரைசிங்கவேல் [மக்கள் சனநாயக குடியரசு கட்சி -தலைவர்] இணை ஏற்பு நிகழ்வை நடத்தினார்.

தோழர்கள் கொளத்தூர் மணி, அரங்க. குணசேகரன், தமிழ்நேயன்[தமிழ்தேச மக்கள் கட்சி], பாவேந்தன்[தமிழ்தேச நடுவம்], சித்தானந்தம் [மக்கள் ஜனநாயக இளைனர் அணி], கருணாநிதி[சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி] ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Pin It