இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , போர்க்குற்றங்கள் மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த இந்தியா வகை செய்ய வேண்டும், இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா நீர்த்துப் போகச் செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
 
 
தோழர் கொளத்தூர் மணி திராவிடர் விடுதலைக் கழகம், தோழர் கோவை இராமகிருஷ்னன் தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர், சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
 
போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், அமைப்புகள்:
 
தோழர் கொளத்தூர் மணி திராவிடர் விடுதலை கழகம் , 
தோழர் கோவை இராமகிருஷ்னன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
தோழர் தியாகு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் , 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 
எஸ்.டி.பி.ஐ
தோழர் செல்வி தமிழ்நாடு மக்கள் கட்சி , 
தோழர் பொழிலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் , 
தோழர் செந்தில், சேவ் தமிழ்ஸ் இயக்கம்
தோழர் சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
மாணவர் இளையராஜா, தமிழ்நாடு மாணவர் இயக்கம் 
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு,
மேலும் தமிழ்த் தேச மக்கள் கட்சி , தமிழர் குடியரசு முண்ணனி , கம்யூனிஸ்டு கட்சி ( மா.லெ.) மக்கள் விடுதலை  தமிழ்நாடு , காஞ்சி மக்கள் மன்றம் , சேவ் தமிழ்ஸ் இயக்கம், தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 
Pin It