காதலாய் கசிந்துருகி வாழாத மனித உயிர் ஏதேனும் உண்டா? இன்று அந்த காதல் சர்ச்சைக்குரியதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

காதல், வீரம், உழைப்பு, சமூகப் பார்வை என்ற விழுமியங்கள் மனித குலத்தின் தொடக்க கால ஆதிப்பொதுவுடைமை தொல்குடி தாய் வழிச் சமூகங்களில் தழைத்து ஒங்கி வளர்ந்தன. அரசு, குடும்பம், தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இந்த விழுமியங்களை சிதைத்தன.

காதல், திருமணம், குடும்பம் ஆகியவைகளை சுயத் தேர்வின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள ஆளுமையுள்ள ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் இன்று முடிவதில்லை. கோத்திரம், சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என்று பல தடைகளை இந்த சமூகம் வலிந்து திணித்துள்ளது.

அதையும் தாண்டிய காதல், இவைகளைத் தகர்க்க முயலும் பொழுதெல்லாம் ஒடுக்குமுறையை, வன்முறையை பிற்போக்குச் சக்திகள் ஏவி விடுகின்றன. அகமண முறையும். அதன் அடிப்படையிலான குடும்பங்களும் இன்றைய சமூக வளர்ச்சிக்குப் பொருத்தம் இல்லாமல் உள்ளன.

இறுக்கமான சாதிய குடும்ப அமைப்பு, புயலில் சிக்கிய உடைந்த கப்பலாய்த் தவிக்கிறது. அகமணத் தகர்வும், ஆளுமையுள்ள இணைகளின் சுயத்தேர்வான காதலும், திருமணமும், ஆண்-பெண் சமத்துவமான குடும்பமும் இன்றைய சமூகத்தின் நாகரீக வளர்ச்சியில் தவிர்க்க இயலாதது.

மனித உயிரின் மறுஉற்பத்திக்கான பாலுறவும், அதன் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சிறுக, சிறுக கட்டி அமைக்கப்பட்ட மனித சமூக நாகரிகத்தின் ஆன்மாவாக காதலின் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக அலசுவோம்.

வரலாற்றின் சக்கரங்களை எவனாலும், இராமானாலும், இராமதாசானாலும் பின் தள்ள இயலாது. அதை நோக்கிய நம் புரிதல்களை மேம்படுத்த இந்த கருத்தரங்கத்திற்கு அனைவரும் வருக…

இடம்: MM பிரிவியு (preview) தியேட்டர். (பெரியார் ரோடு நிறுத்தம்)
137. கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை.
(கோடம்பாக்கம் பாலம் அருகில்).

நாள்: 21.12.2012 வெள்ளி மாலை 5.30 மணி

வரவேற்புரை: வழக்குரைஞர் மனோகரன்.

தலைமை: வழக்குரைஞர் நடராசன், எழுத்தாளர்.

உரை

காதல்: சாதி. .வர்க்கம் - வழக்குரைஞர் முருகவேள் ('நாளி' ஆவணப்பட இயக்குனர்).

காதலும் பாலியல் விடுதலையும்… ஒர் பெண்ணியப் பார்வை - எழுத்தாளர் வ.கீதா (சமூக செயற்பாட்டாளர்)

காதல் கொல்லுதடிப் பாப்பா: வழக்குரைஞர் கனகவேல் (கவிஞர்)

செவ்விலயக்கியத்தில் காதல்: முனைவர் பட்ட ஆய்வாளர் கோகிலா (உலக தமிழராய்ச்சி நிறுவனம்)

காதல் வனைந்த மானுடம்: எழுத்தாளர் தங்கபாண்டியன் (தேசிய முன்னணி இதழ்)

- மக்கள் வழக்குரைஞர் கழகம் & அறிவுச்சுடர் நடுவம்
பேச 9940176599. 9840855378

Pin It