மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற இருக்கும் முன்னாள் நீதியரசர், மனிதநேயப் போராளி வீ.ஆர்.கிருஷ்ணையர் அவர்களின் 98வது பிறந்த நாள் நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நாள்:      1 டிசம்பர் 2012, சனிக்கிழமை

இடம்:     சர்.பி.டி. தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர்

நேரம்:     மாலை 5 மணி முதல் 

நிகழ்ச்சி நிரல்:

      வரவேற்புரை

      கலை நிகழ்வு    

கிருஷ்ணையர் “1915 முதல்” – ஆவணப்படம் திரையிடல்

வாழ்த்துரை

கேக் வெட்டும் நிகழ்வு,

விருது மற்றும் பெறுபவர் அறிமுகம்

விருது வழங்கும் நிகழ்வு

விருது பெற்றோர் ஏற்புரை

“சக்கியடிக்கும் சத்தம்” – ஆவணப்பட முன்னோட்டம்

கிருஷ்ணையர் ஏற்புரை (நேரலையில்)

என்ற வடிவத்தில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வு முற்றிலும் அரசியல் சார்பற்ற நிகழ்வாக நடைபெறவுள்ள வேளையில், முன்னாள்/இந்நாள்  உயர்நீதிமன்ற/உச்சநீதிமன்ற நீதிபதிகள், முன்னிலை வழக்கறிஞர்கள், சமூக/மனிதநேய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், திரைத்துறையினர் மற்றும் கல்வியாளர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.  

கிருஷ்ணையர் – சிறு குறிப்பு

கிருஷ்ணையர் 1915 நவம்பர் மாதம் தலைசேரியில் பிறந்தவர்.

1952-ஆம் வருடம் மெட்ராஸ் மாகாணத்திற்கு தலைசேரியிலிருந்து சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • 1957-59 ஆண்டுகளில் கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டம், உள்துறை, நீர்வளம் மற்றும் மின்சார அமைச்சராக பதவி வகித்தவர்.
  • 1968-71 வருடங்களில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1973-80 வருடங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தவர்.
  • நீதி, மனிதநேயம், மனித உரிமைகள் ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்தவர். எவ்வித சமரசமும் இன்றி நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்கும் போராளி.
  • போராளிக்கே உரிய சிறைவாசமும் அனுபவித்தவர். சிறைவாசமும் அனுபவித்து பிறகு உச்ச நீதி மன்ற நீதிபதி, மற்றும் சிறைத்துறை அமைச்சர் பதவி வகித்த மனிதருள் மாணிக்கம்.
  • சிறை கண்ட அனுபவத்தில், மனித நேயப் பற்றில், சிறை சீர்திருத்தம் பலவற்றிற்கும் வித்திட்டவர்; சிறைக்கைதிகள் மீதான காவல் ஒடுக்குமுறைகள் கண்டு வெகுண்டெழுந்தவர். அமைச்சராக இருந்தும் காவல் நிலையத்திற்கே சென்று தட்டிக் கேட்ட சம்பவங்கள் இவரின் மாண்பைப் பறை சாற்றும்.
  • கம்யுனிச ஈடுபாடு இருந்தாலும், கம்யுனிச அமைச்சரவையில் இருந்தாலும், சீனாவை எதிர்த்து, திபெத்திய மக்களின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் ஓங்கி குரல் கொடுப்பவர்.
  • மனித உயிர் மிக உன்னதமானது என்ற அடிப்படையில் மரண தண்டனைக்கு எதிராகவும், கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும், முல்லைப் பெரியாரில் சுமூக தீர்வு வேண்டியும் இவர் ஆற்றிய பணிகள், எழுதிய கடிதங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.  
  • கேரளாவின் உள்துறை அமைச்சராக இருந்தபோதும், உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்தபோதும் அனைத்து மரண தண்டனைகளையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்த மனிதநேயர்.  

இந்நிகழ்வின் தேவைகள்:

நிகழ்வரங்கம் மற்றும் ஒலி/ஒளி அமைப்பு.                   15000

சுவரொட்டிகள் – அச்சடிப்பு மற்றும் ஒட்டுதல்                 30000

விளம்பர பதாகைகள் – உருவாக்கம் மற்றும் அமைத்தல்      25000

அழைப்பிதழ் அச்சடிப்பு மற்றும் விநியோகம்                   5000

ப்ரொஜெக்டர் மற்றும் திரை                                  5000

கலைக்குழு                                                       15000

நினைவுக்கேடயம்                                           5000

விருதுகள்                                                  60000

விமான பயணச்சீட்டு                                        30000

விடுதி வாடகை                                             15000

கேக் மற்றும் தேநீர்                                          10000

இதர மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புச் செலவு              20000

 மொத்தம் எதிர்பார்க்கும் செலவு                     ரூ. 2,35,000

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற தங்களுடைய வருகையையும், மேலான நிதி பங்களிப்பையும் “மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின்” சார்பாக தாழ்மையுடன் வேண்டுகிறோம். 

Bank details: 

Account Name:        Humanism Protection center

Bank:                          Karur Vysya Bank,

Branch:                      Alandur – Chennai

Account No:              1104 1350 0000 1303

IFSC CODE:             KVBL0001104

விருதுகளும் – விளக்கங்களும்: 

கிருஷ்ணையர் மனிதநேயத்திற்கான விருது 2012

இவ்விருது இனம், மொழி, மதம், போன்ற எந்த சார்பையும் பாராமல் மனிதத்தை மட்டும் போற்றும் ஓர் உயர்ந்த உதாரண செயல் புரிந்தோருக்கு, வழங்கும் கவுரவமாக இருக்கும். 

கிருஷ்ணையர் மரண தண்டனை எதிர்ப்பு விருது 2012

மரண தண்டனை ஒழிக்க சட்டப் பூர்வ நடவடிக்கை, சட்ட திருத்தத்திற்கான முன் வேலைகள் போன்றவற்றை முன்னெடுக்கும் ஒருவருக்கு இந்த கவுரவம் வழங்கப்படும். 

கிருஷ்ணையர்-செங்கொடி விருது 2012  

இது பெண்களுக்கான விருது. மரண தண்டனை ஒழிப்பில் பங்காற்றிவரும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிக்கு, அவரது சிறப்புவாய்ந்த செயலை அங்கீகரிக்கும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் இவ்விருது வழங்கப்படும்.

Pin It