விழிகளில் ஊற்றெடுத்து
வசீகரத்துடன் பாய்ந்துகொண்டிருக்கும்
தீராநதியில்தான் மிதந்துபோகிறது
அன்று
நீ வேண்டாமென்று தூக்கிய வீசிய
என் கனவு.

இன்றோ
புதைந்த கனவொன்றை
பறந்தவாறு தேடிக்கொண்டிருக்கிறாய்
ஊற்றுக்கண் மிகுதியால்
நான் உப்பு நதியாகவே
மாறிவிட்டிருக்கும் என் ஆகாயத்தில்.

எப்படியாயினும்
இனி என்னுடைய எந்தக் கனவும்
இலவசத்திற்கோ,
விற்பனைக்கோ,
கடனுக்கோ என்றுமே கிடையாது
உனக்கு மட்டும்!!!

- வான்மதி செந்தில்வாணன்

Pin It