கடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடட கடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடட

ஓயாத சத்தம் என் காதுகளுக்குள் நாராசமாய் பாய்ந்தது.

men 385என் வீட்டுக்கு அருகில் போர் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

புரண்டு படுத்தேன். துண்டை எடுத்து காது அடைபடும்படி சுற்றிக்கொண்டேன். ம்ஹூம் பிரயோஜனம் இல்லை. பக்கத்து அறையை திறந்து பார்த்தேன்.

அங்கே இந்த சத்தத்திலும் அனைவரும் உறங்கியிருக்க மலையரசன் மட்டும் விழித்திருந்தான்.

நாங்கள் அனைவரும் IT ஊழியர்கள். இரவு 12 மணிக்கு வேலை முடிந்து வந்திருந்தார்கள். IT ஊழியர்கள் என்றால் மாதம் லட்சங்களில் அல்லது அதற்கு மிக அருகில் சம்பளம் வாங்கிக்கொண்டு வார கடைசியில் குடித்துவிட்டு ஏதேனும் ஒரு பெண்ணோடு பப்பில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருப்பவர்கள் என்று நினைத்தால்.... சாரி சார் நீங்க நெறையா சினிமா பாக்கறீங்க.

6000 ரூபா வாடகைக்கு வீடு பிடித்து. அதில் 6 பேர் தங்கிக்கொண்டு கடையில் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை என்று வியாக்யானம் பேசி செலவை குறைக்க நாங்களே சமைத்து, வீட்டுக்கு 5000 கொடுப்பதற்குள். ஸ்ஸ்ஸ் ஸ்ஸப்பா...

இப்படி சொந்த மாநிலத்திலேயே வந்தேறிகளாக இருக்கும் எங்களை தான் சமூக பொறுப்பில்லாதவர்கள் சுயநலவாதிகள் என்று(பேச்சிலர்க்கு ரூம் கூட வாடைகைக்கு விடாத பொதுநலவாதிகள்) திட்டுகிறார்கள். அப்படியே சினிமாக்களும் காட்டுகின்றன.
.
.
"என்னடா மலையா" என்றேன்.

"சொல்றா சத்யா. இன்னும் தூங்கலையா?"

"எங்க தூங்கி தொலைக்க."

"நாளைக்கு சனிக்கிழமை flexible timing. காலைல 8 மணிக்கு போயிட்டு சாயங்காலம் சீக்கிரம் வரலாம்னு நெனச்சேன். ம்ஹ்ம் அதுக்கும் வெனைய வெச்சுட்டாய்ங்க" அலுத்துக்கொண்டான்.

"என்னடா எதாவது படம் பாக்கலாமா?" என்றேன்.

"போடா முடி(மயிரு கெட்ட வார்த்தையாம்) தூங்கலாம்டா."

"இந்த சத்தத்துலையா?"

"சரி வா தம் அடிக்கலாம். இந்த போர் எப்புடி போடறாங்கன்னு நான் சொல்லித் தரேன்."

சிகரெட்டை பற்ற வைத்தபடி வெளியே போனோம். போர் போடுவதற்கான விளக்கம், கொஞ்சம் அரசியல், பேசியதில் ஒன்றரை மணி நேரமும் ஒரு பாக்கட் சிகரெட்டும் காலியானது.

திரும்ப அறைக்கு வந்தோம். "மணி 3 என்னடா பண்ணலாம்." என்றான். "வாடா பேசாம கேரம் போர்டு வெளையாடலாம்". என்றேன் நான்.

"போடா அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் தூங்கப் போறேன்" திடீரென்று போர் எந்திரத்தின் சத்தம் நின்றது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். "சூப்பர் டா மலையா. தூங்கிடுவோம். திரும்ப அது ஸ்டார்ட் பண்ணறதுக்குள்ள தூங்கிடுவோம்." அவனும் அங்கீகரித்தான்.

5 நிமிடம் போனது.

"டேய் மலையா"

"என்னடா மொட்டையா?"

"பசிக்குதுடா"

"அதுக்கு?"

"வாடா மாட்டுத்தாவணி போய் சாப்பிட்டு வருவோம்"

"வர மாட்டேன்னு சொன்னா விடவா போற வா போவோம். போர் போட்டு முடிச்சுட்டாங்க போல இருக்கு. நிம்மதியா சாப்பிட்டு வந்து தூங்குவோம்." என்றான்

"ராத்திரி புரோட்டவே சாப்பிட கூடாது" என்றபடி ஆளுக்கு 5 புரோட்டவை விழுங்கி ஆப்பாயிலை அமுக்கினோம்.

"அவ்ளோ தான்டா போறோம் தூங்கறோம்" என்றபடி ஒரு சிகரெட்டை கரைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

நிசப்தமாக இருந்தது.

நிம்மதி பெருமூச்சு விட்டபடி ரூமுக்குள் போய் படுத்தோம்.

"மூனே முக்கால் ஆச்சு எட்டு மணிக்கு எந்திரிக்கறோம் எட்டரைக்கு ஆபீஸ் போறோம்."

"டன்"

3.50

கடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடடகடடடடடடடடட

"என்னடா மலையா?"

"நான் சும்மா விட மாட்டேண்டா இதெல்லாம் ரொம்ப அநியாயம் தூங்கனும்னு நெனைச்சு வந்தா ராத்திரியெல்லாம் போர் போடறானுங்க. வாடா இன்னிக்கு என்ன பிரச்னை ஆனாலும் சரி அவனுங்கள ஒரு வழி பண்ணினா தான் எனக்கு நிம்மதி."

"ஆமாண்டா வாடா" என்றபடி லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு கிளம்பும்போது தான் அது நியாபகம் வந்தது.

"ஒரு நிமிஷம் இருடா" என்றேன்.

"என்னடா? ஒன்னும் பயப்படாத மச்சி நான் பாத்துக்கறேன்" மலையரசன் ஆள் கரடு முரடாக இருப்பான் ரெட்டைநாடி தேகம். ஆனால் அது பிரச்சினை இல்லை.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா. நான் ஜட்டி போட்டுட்டு வரேன்"

"த்து"

ரெண்டு பேரும் வேகமாக வெளியே போனோம். எங்களை அவர்கள் யாரும் சட்டை செய்யவில்லை. கோபமாக பார்த்தபடி மலையரசன் முன்னே போனான்.

"அண்ணே" என்றான்.

முண்டா பனியனோடு ஒருவர் நிமிர்ந்து பார்த்தார்.

"என்னண்ணே திரும்பி போட்டுட்டீங்க? முடிச்சுட்டீங்கன்னு நெனச்சோம்."

"இல்லப்பா பைப் எறக்கிட்டு இருந்தோம். இன்னும் போடணும்"

"ஓ"

அவர் திரும்பி வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

"வாடா" என்றபடி கோவமாக திரும்பி நடந்தான் மலையரசன்.

நானும் பின் தொடர்ந்தேன்.

"மதிக்கவே மாட்டேங்கறானுங்க பாரு மச்சி" என்றான்.

"ம்"

"இவனுங்களல்லாம் சும்மா விட கூடாது" சும்மா தான் விட்டுவிட்டு வந்திருந்தோம்.

ரூமுக்குள் வந்து படுத்தோம். மலையரசன் கடும் கோவத்தில் இருந்தான்.

நான் கேட்டேன் "கடைசில அண்ட்ராயர் போட்டதுக்கு அர்த்தம் இல்லாம போச்சே"

திரும்பி பார்த்து முறைத்துவிட்டு "இருடா வரேன்" என்றபடி வேகமாய் எழுந்து போனான்.
.
.
திரும்பி வரும்போது கையில் கேரம் போர்டு காயின் இருந்தது.

- சத்யகிருஷ்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It