வெட்டி எறியப்பட்ட
சுவர் வேம்புவின் வேர்களை
நட்டுவைக்கப் போவதாய் நினைத்து
வெறுமனே உட்கார்ந்திருக்கிறார்கள்
சுள்ளி பொறுக்கும் மூதாட்டியைப் பார்த்து
என்னுள் எரிந்துகொண்டிருக்கிறது
சுவரை ஊடுருவியிருந்த 
வேர் இன்று
அடுப்பில் வைக்கப்பட்டு
நெருப்பால் பிளக்கப்படும் காட்சி.
 
- ஆ. மீ. ஜவஹர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It