செருப்புப் போட மறுக்கும்
சிறுமியை
'இந்தக் காலத்தில்
இப்படி யாரும் இருப்பார்களா?' என்றவாறே
கையில் பேப்பர் பேனாவைக் கொடுத்து
வீதியில் நிறுத்தி
'செருப்பில்லாமல் வருபவர்கள்
எண்ணிக்கையைக் குறித்து வைஎன்றேன்...
சற்று நேரத்தில் வந்து பார்த்தபோது
பாதையில் இருந்த பூஞ்செடியின் தளிர்களைக்
கிள்ளியெறிந்து கொண்டிருந்தவளை
'அறிவில்லை உனக்கு?'
எனத் திட்டிச் சென்றேன்...
அரைமணி நேரம் கழித்து வந்து
'ம்ம்.. எத்தனை பேர்?' என்றேன்
'இருபத்தாறு' என்றாள்
'அட, இவ்வளவா?' என்றேன்
'இது அறிவில்லாதவர்கள் எண்ணிக்கை' என்றாள்!

-நாவிஷ் செந்தில்குமார்

Pin It