Man in abroadஆசையின் திசையிலே
வீசிய புயலில்
தள்ளப்பட்டேன் வேலையில்
பணம் காய்க்கும் பாலையில்

வந்த நாள் முதலாய்
சொந்த பந்தம் மறந்து
இந்த நாள் வரை என்
இன்பங்களும் மறைந்தன

சுமைகள் கூடியே
சுகங்களும் போயின
இமைகள் மூடியும்
தூக்கமும் போயின

இன்று போவேன் நாளை போவேன்
என்று நாளும் வார்த்தை வந்தன
எத்தனை நாளை போயின பின்னும்
போதும் என்ற மனமே வராமல் போயின

ஆசையின் திசையிலே
வீசிய புயலில்
தள்ளப்பட்டேன் வேலையில்
பணம் காய்க்கும் பாலையில்

புயல் ஓய்ந்த வேளையில்
கரை திரும்ப பார்கிறேன்
நரை தெரிந்த பின்பும்
கரை தெரியவில்லை


சுரேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It