warநிச்சயமற்ற பொழுதில்
பதுங்கு குழியில் பதறும் - என்
நெஞ்சம் - பேரழிவே!
நீ தான் விடுதலையா?

பிணம்தின்னி கழுகின்
கொடிய அலகிலிருந்து
பாம்பின் நச்சு பற்களில் - எங்கள்
எதிர்காலம்!

விடியலைத் தேடிவிம்மி அழுத
நெஞ்சம் - படைகளை
கண்டு பதறுகிறது!
கனகுண்டுகளை கண்டு
கணங்கள் உறைகிறது...

கண் விழித்து பார்க்கும்
போதெல்லாம் உலங்கு வானூர்திகளும்
கனல் குண்டுகளும்...
கனவில் கூட புதைகுழிகள்...
பேரழிவே! உன் பெயர் தான்சுதந்திரமா?
அழிவே எங்கள்
தாயகத்தின் தேச அடையாளமாய்...
ஆயுதங்கள் மட்டுமா
பேரழிவு? - உந்தன்
தடைகளில் மடிந்தவர்
எதனால்....?

உனக்கும், அவனுக்கும்
வேறுபாடென்ன?
அடிப்படையில் கொள்கை
ஒன்று தானே!
மரணம் மரணத்தை நிறுத்துமா?
பேரழிவாளன்
அழிவை தடுக்க முடியுமா?

கருப்புத் தங்கம் மீதினில்
கதற வைத்தகால தேவனே - வந்துவிடு
அழிந்த - எந்தன்
மழலை வேண்டாம்...
விடுதலையை மட்டும்
திருப்பி தந்துவிடு! 

திரு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It