deadதாலிபான் கோரிக்கை,
ஆப்கான் மறுப்பு,
மாண்டது - ஓர் இந்திய உயிர்!

குழந்தை பிறந்தது,
மழை பெய்தது,
நகை வாங்கியது
காய்ச்சல் அடித்தது,
சினிமா பார்த்தது,
தீபாவளிக்கு வாழ்த்தியது - என

அனைத்தையும் தொலைபேசியிலே
கேட்டுச் சலித்துப்போன - அந்த குடும்பத்திற்கு,
இறந்த செய்தி மட்டும்,
இந்திய தொலைக்காட்சிகளில் - முதன்முறையாக!!!!

எட்டு மணி செய்தியின்போது
‘உச்‘ மட்டும் கொட்டிவிட்டு,
ஒன்பதுமணி நாடகத்திற்கு,
கண்ணீர்விட தயாராகிவிட்டனர் - மக்கள்!!!

தந்தை புகைப்படம்
டிவியில் பார்த்ததும்,
கைத்தட்டி ரசிக்கும்
அந்த பிஞ்சுக்குழந்தை!!

ரசிக்கட்டும் - தலைப்புச்செய்தி,
Flash news, Live coverage - என
இந்த பரபரப்பும், நாளைய
போட்டியில் சச்சின் சதமடித்தால்,
பறந்துவிடும்!!!

உலகநாடுகளே!!!
நிவாரணமும், கண்டனங்களும்
வேண்டாம்,

“அந்நிய டாலருக்கான,
இன்றைய இந்திய மதிப்பு,
4.33 உயிர்கள்” - என
நாளைய வர்த்தக செய்திகள்
வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!!!.

கெ.கார்த்திக் சுப்புராஜ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It