Eunuch
நூறுசத ஆணோ, பெண்ணோ
பிறப்பதில்லை இவ்வுலகில்
தாயின் உணர்வு சில வீதம்
தந்தை உணர்வு சில வீதம்
எந்த உணர்வு மிகுதியோ
அந்த உணர்வே பாலாகும்.

அவதார மோகினிக்கும்
அர்த்த நாரி இறைவனுக்கும்
அர்த்த மண்டபத்தில் இடமுண்டு..
அரவாணிகளின் நர பிறப்போ...
நரகமான இந்நகரத்தில்.....

உடம்பும் மனமும் மாறி விட்டால்
தொடங்கி விடும் அவமானம்
இடமே இல்லை உலகத்தில்..
அங்கம் மாறி பிறந்ததாலே
எங்குமில்லை அங்கீகாரம்...

தங்கள் வெறுப்பை அவர்களெல்லாம்
தங்கம் போல சேர்த்து வைத்து
எங்கோ இருக்கும் இறை மணந்து
கூவாகத்தில் தாலி அறுத்து
கேவி கேவி அழுகின்றார்..... 
கோவேறு கழுதைகளாய்...
குறிகள் தவறிய இலக்குகளாய்!!!

கற்பனை பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It