சிறு வயதில் நீ எனக்கு பரிசளித்த
ஒரு அழகிய மயிலிறகை இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கிறேன் என்றெனக்கு திருப்பி தருகிறாய்

நீ எனக்கு கிணற்றடியில் கொடுத்த முத்தத்தை
இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேனென
திருப்பித் தர முயன்ற போது ஓடி ஒளிகிறாய்
என்னடி நியாயம் இது??

2.நம் வீட்டில் நிகழும் திருமண விழாக்களில்
மாப்பிள்ளைத் தோழனாகவோ பெண்தோழியாகவோ
நிற்க நீயும் நானும் சண்டையிட்ட நாட்களை
நினைவுப் படுத்துகின்றன நம் திருமணத்தின் போது
என் அக்கா, அண்ணன் குழந்தைகள் சண்டையிட்டது..

3.எங்கே காதலிக்க வாய்ப்பில்லாமல் நமக்கு
திருமணம் செய்து வைத்து விடுவார்களோ
என்று பயந்து உன்னை வெறுப்பது போல
நானும் என்னை வெறுப்பது போல நீயும்
நடித்து யாருக்கும் தெரியாமல் காதலித்த
அந்த நாட்களை காதலுடன் நினைத்துக் கொள்கிறோம்
நாம் இப்போதும்..

கார்த்திக் பிரபு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It