என் உயிர் தந்து என்னுயிராகி விட்டதாயே
அன்று உன்அருகிழந்து இன்று உனையும் இழந்து தனிமரமாய்
குளிருக்குள் உன் சூடுதேடும் பறவையானேன்
சிறு பிள்ளை தன் தாயிழந்த துயர் எம்மை வாட்டுகிறது
கோழிக்குஞ்சுகளாய் உன் செட்டைக்குள் நாம் இருந்த
நாட்களை தேடுகிறேன்
இறுதிவரை உன் முகம் காணாது போனதற்காய்
ஏங்குகிறேன்
எமக்காக உன் நலமிழந்து
எமைக்காத்த என் தாயே
நீ இருக்கும் வரை எனை அணுகா
வாழ்வின் துயர்
இன்று என்னிருப்பும் கேள்வியாகி சுமையாகிப்போனதுபோல் .
உன்னிடம் நான் கற்றவைகள்
எப் புத்தகத்திலும் அச்சிலில்லை
உன் இனிய கனவுகளை எம்மால் நினைவாக்க முடியவில்லை
உன்னுடன் கடசிவரை சேர்ந்து வாழவும் முடியவில்லை
இருப்பினும் உன் நினைவுகளுடன்
நீ என்றும் என்னுடனுடனிருக்க
தன்னலமற்ற, எவருக்கும் தீங்கு எண்ணா
உன் உள்ளம் வேண்டிநிற்கிறேன் அம்மா

றஞ்சனி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It