என் காலத்தில் பார்த்ததெல்லாம்
இன்னும் இருக்கத்தான்போகிறது

என் முன்னோர் பார்த்ததைத்தான்
நானும் பார்க்கிறேன்

என் பின்னோரும்
பார்க்கப்போகிறார்கள்

அதற்காகவும்
அங்கே இருந்தும்
குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்

அதற்காகவும்
அதிலிருந்தும்
இலக்கியம்
பிறந்துகொண்டே இருக்கும்

எல்லாம்
நவீன ஊடகத்தில்...
நவநவமாய்....

ஆனாலும்
அது இருக்கும்
ஊரின் ஓர் ஓரத்தில்
கொஞ்சம் தூரத்தில்

மூச்சுப் பயிற்சியாய்
முடியும் வாழ்க்கையில்
எல்லாம் அப்படியே
இருக்கத்தான் போகிறது

என்ன பொருளுடையது
இந்த மூச்சுப்பயணம்?

அட என்னதான் இதில்
மிச்சம்?.....

(அன்பாதவனின் 'தற்காலக் கவிதைகள் ஒரு பார்வை' என்ற நூலைப் படித்துக்கொண்டு வரும்போது, பதினைந்தாவது பக்கத்தில் பார்வை பதியும்போது கிளைத்தச் சிந்தனையே இக்கவிதை)

பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It