கண்ணில் உறுத்துகிறது
சிறு துரும்பு

உடலை வருத்தலாம்
சக்திமிகு இயற்கை

செயற்கைகள் பற்றி
சொல்ல வேண்டியதில்லை

உள்ளுறுப்புகள் வலிகொள
காரணங்கள் பல

புற உடல் காயம்பட
சந்தர்ப்பங்கள் பலப்பல

நகராமல் இருந்தாலும்
வலிக்கத்தான் செய்கிறது.

வினை புரிதல்களால்
விளைவுகள் எக்கச்சக்கம்

வினை புரிதல்களால்
வலிகள் மிச்ச சொச்சம்

தறிகெட்டோடுகிறது
காமப் புரவி


மதியழகன் சுப்பையா, மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It