Disasterகாலம் என இல்லாத ஒன்றை
கிழமைகள் என்றும், மாதங்கள் என்றும்
வருடங்கள் என்றும்
கற்பித்துக் கொண்டோம்.

ஒரு மாபெரும் சமுத்திரத்தை,
பல பெயரிட்டு, பல கடல்களாக்கி
எல்லைகளையும் வகுத்துக் கொண்டோம்.

மாபெரும் நிலப் பரப்பை
சில எல்லைகளை கற்பித்துக் கொண்டு,
சண்டைகளையும், போர்களையும்
உருவாக்கினோம்.

இல்லாத மதத்தையும், சாதியையும்
கற்பித்துக் கொண்டு
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றோம்,
உடமைகளை அழித்தோம்,
ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தோம்.
சில காதல்களையும், நாம் விட்டுவிடவில்லை.

இந்த கற்பிதங்கள் யாவும்
இதுவரை,
இப்பூமி அறியாதது.

அது இவைகளை அறிந்து
கொண்ட போது
பேரழிவுகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது. 

ம.ஜோசப் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It