மேல்சட்டை போடாத மனிதர்கள்
சில மாடி வீடுகள்
நிறைந்த கூரைவீடுகள்
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
அக்கறைப்படும் மனிதம்
வேப்பங்குச்சிதான்
பற்களின் வெண்மைக்கு காரணம்
காலாவதியாகிப்போன
பொருட்கள் நிறைந்த பெட்டிக்கடை
நாளைக்கு இரண்டுமுறை
வந்துபோகும் டவுன் பஸ்
பிள்ளையார் கோவில்
திண்ணைதான் பொழுதுபோக்கு
கருவைமரங்களே நவீன கழிப்பிடக்கூடம்
வளராத கிராமத்தின் சாலைகளுக்கோ
தள்ளாத வயசு
ஆனாலும் ஸ்மார்ட்டாக இருக்கின்றது
அனைவரிடத்தும் அலைபேசிகள்..!
- நேசன் மகதி