சட்டென பெயர் மறந்து போன
ஒருவரின் முகம்
நினைவில் ஏனோ
தங்கிப் போனது.
அடர் நிறத்தவர்
கொழுகொழுவென
வாய்த்திருக்கும் கன்னம்
பேரழகு.
நிமிர்ந்தே
பார்க்கும் படியான உயரம்
மடித்த முழுக்கைச் சட்டை
எப்போதும் மாட்டப்படாத
முதல் பித்தான்..
அகண்ட உள்ளங்கையால்
உறுதியாகக் கையைப்
பற்றிக் கொள்வார்
அதிர்ந்து சிரிப்பார்
அவருடைய பெயர்....
அது சரி
வெறும் பெயர்களைச் சுமந்து கொண்டு
என்ன செய்வது?

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.