கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள்
கருமாதிக்கும் வாழ்த்துக்கள்
போன வாரம் முடிந்து போன
பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்
முந்தின வாரம் முடிந்த
காது குத்துக்கும் வாழ்த்துக்கள்
போட்டோ காட்டினால் வாழ்த்துக்கள்
டாட்டா காட்டினாலும் வாழ்த்துக்கள்
கிடைத்த புது காதலிக்கு வாழ்த்துக்கள்
ஓடி போன பழைய காதலிக்கும் வாழ்த்துக்கள்
புக் வாங்குங்க... என்றாலும் வாழ்த்துக்கள்
போங்கடா புத்தி கெட்டவர்கள் என்றாலும் வாழ்த்துக்கள்
வாத்து நடை வீடியோவுக்கு வாழ்த்துக்கள்
வெக்கம் கெட்ட காப்பி பேஸ்ட்டுக்கும் வாழ்த்துக்கள்
மழை பெய்கிறது வாழ்த்துக்கள்
வெயில் காய்கிறது வாழ்த்துக்கள்
குடும்பத்தோடு தற்கொலை வாழ்த்துக்கள்
குரங்கு குட்டிக்கரணத்துக்கும் வாழ்த்துக்கள்
தெருநாய்க்கு பிஸ்கட் போடு வாழ்த்துக்கள்
பைக்கில் ஊர் சுற்று வாழ்த்துக்கள்
வாழ்த்தி வாழ்த்தியே சோர்வாக்கி விடு வாழ்த்துக்கள்
சோறாக்கி புளி குழம்பு வை வாழ்த்துக்கள்
அதுக்கும் வாழ்த்துக்கள் இதுக்கும் வாழ்த்துக்கள்
தும்முனா வாழ்த்துக்கள் தூங்குனா வாழ்த்துக்கள்
அழுதாலும் வாழ்த்துக்கள் ஆற்றாமைக்கும் வாழ்த்துக்கள்
நோகாமல் நோம்பி கும்பிட
வாழ்த்துக்கள் தான் சிறந்த வழி வாழ்த்துக்கள்
ஒரு வாழ்த்துக்கும் மறு வாழ்த்துக்கும்
இடையே தான் இணைய வாழ்வின் வாழ்வும் சாவும்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

- யுத்தன்

Pin It