ஊரைச் சுமந்து கொண்டு
ஊருக்குச் செல்கிறேன்.
எனைச் சுமந்திருக்கும் ஊர்
எங்கேயும் செல்லாமல் காத்திருக்கிறது
அடையாளம் தொலைந்து போனாலும்
மண்வாசனை மாறாது
எனக்காக அதே ஊரில்...
நான்தான் மாறிவிட்டேன்
நிறையவே விதவித
முகக் கவசங்களுடன்..

- சதீஷ் குமரன்

Pin It