படர்ந்து கிடந்த
இச்சை யோசனைக்குள்
சித்திரம் கொத்தாய் உணர்வு சமைக்கும்
தகவமைவு
தன்னைப் பற்றி
எல்லாம் பெற்று விட,
ஒரு போதும் தூங்காது கண்கள்.
அருகிருப்பின்
தூர தேசம்
வேக கிடைக்கும் வியர்வைத் துளிகள்
திக்கும் உள்வெளி
இருள் விழிக்குள்
அடங்கிவிடாது
ஊர்ஜிதப்படுத்துதலின் சுகம்.
கடக்க வேண்டிய காட்டுக்குள்
திறக்காத கூடு
தவித்து நிறையும் இரவின் தடம்
மேலேறும் அதன் தொனி
வெறுமையில் குமையும்.
நிச்சயமற்ற மௌனம் மட்டும்
விளங்காத அதிசயம்
விளங்க மறுக்கும் ஏகாந்தம்
விரல் மீட்டல் திசை தொலைதல் எல்லாம்
முந்தைய புள்ளி
முற்றும் தள்ளி.

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It