பறவைகள் மேல் ஆசைப்பட்டு
கூடு செய்தாயிற்று
அதன் மேல் காதலும்
வந்தாயிற்று
அழகான வண்ணத்தில்
லவ்பேட்ர்ஸ் வாங்கியது
அன்பாகத்தான்
பூட்டிய கதவுக்குள்
பறவைகள் கொஞ்சலை
ரசித்த கண்களுக்கு
என்னவோ தெரிவதில்லை
சிறகுகளின் அழகு பற்றி
இதயத்தில் பூட்டியதை
திறப்பதுதானே காதல்?
கூண்டுக் கதவை திறந்த
மனதிற்குத் தெரியும்
எப்படி பறவைகளைக்
காதலிப்பது என
கூண்டுகளுக்குப் பதில்
மரம் செய்து கொண்டிருக்கிறேன்
என் காதலை பறவைகளுக்கு
இப்படித்தான் சொல்ல முடியும்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It