குழந்தைகளை
கவர்ந்து விடுகின்றன
சாலையோரங்களில் முகம் காட்டும்
கரடி பொம்மைகள்

வாடகை சாத்தியப்படாததால்
தெருக்களில்
சுதந்திரத்தைச் சுவாசித்தபடி
குழந்தைகளுக்குக் களிப்பூட்டுகின்றன

வெளிர்நிற பொம்மைகளுக்காக
உடலெங்கும் அலமாரிகள்
தோன்றி விடுகின்றன

நிறுத்தி வைக்கப்பட்ட
சொகுசுக் கார்களில்
ஏறிக் கொள்ளவே
பொம்மைகளும்
ஆர்வம் காட்டுகின்றன

கரடியோடு
உண்டு உறங்கிய
சிறுமிக்கு
அலைபேசி விளையாட்டுகள்

தனிமைப்படுத்தப்பட்ட
மனிதர்களைப் போல
மெத்தை மீது
கண்கள் வற்றிப் போய்
சோகம் பூத்துக் கிடக்கின்றன
கரடிகள்

- முனைவர் சி. ஆர்.மஞ்சுளா

Pin It