அறைச் சுவர்களின்
மௌனபாஷையில்
புத்துயிர்க்கும்
நினைவுகள்
மின் விசிறியோடு
ஊடாடி சுழல...
அதிலொன்று
சுவற்றில் அறைந்த
ஆணியில் தனைக்
கோர்த்தும் நிற்க...
சாளரம் தாண்டிவந்த
கரும்நிறத்துப்
பூச்சியுடனான
கடைசி உரையாடல்
மட்டுமே
எஞ்சி நிற்கின்றது
இவ்வறையில்....
விடியும்வரை
தலை அசைத்து
ஒத்திசைந்த
அந்த ஆணியில்
தொங்கும்
அந்நினைவினை
விடாமல்
பிடித்து வைத்திருக்கின்றது
நிசப்தம்....

- முனைவர் கோ. சுனில்ஜோகி

Pin It