கொட்டாங்குச்சியில்
மண் அள்ளிப் போட்டு
குழந்தைகள் ஆக்கிய
கூட்டாஞ்சோறு தின்று
செரிமானமாகாமல்
உருண்டு புரண்டு
திணறிக் கொண்டிருக்கிறது
சிறார்களின் கூச்சலில்
தூக்கம் தொலைத்த ஞாயிறு...

- சதீஷ் குமரன்

Pin It