யாழினிக்குட்டியிடம்
கதை கேட்கவே வந்திருக்கும்
அடைமழைக்குப் பரிசாக
வரைந்து வைத்திருக்கிறாள்
ஐஸ்கிரீம் ஓவியத்தை.
சிலிர்த்து குளிர்ந்த
பெருமழை பொழிகிறது
துளித்துளியாய்
யாழினியின் பூமியில்
ஐஸ்கிரீம் சிற்றோடைகள்
ஊற்றெடுத்துப் பாய்கிறது.
தேய்பிறை நிலவு உருகி
கரைய கரைய..

- சதீஷ் குமரன்

Pin It