ஒற்றை யானை பிடிபடுகிறது
ஒற்றைப் புலி பிடிபடுகிறது
ஒற்றைக் கரடி பிடிபடுகிறது
ஒற்றைக் காட்டெருமை பிடிபடுகிறது
ஒற்றை மான் பிடிபடுகிறது
ஒற்றை சிறுத்தை பிடிபடுகிறது
இருந்த ஒற்றைக் காடும்
பிடிபட்டுவிட
பிடிபடாமலே மிச்சத்தையும்
அடித்துக் கவ்வி
விழுங்கிக் கொண்டிருக்கும்
பாசிசக் கும்பல்
ஒளிந்து கொண்டிருக்கிறது
அந்த
நாற்காலியின் மறைவில் ..

- சதீஷ் குமரன்

Pin It