நதி தேடி மூச்சிரைக்கும் மனதுக்கு
உடலெல்லாம் தாகம்
நலுங்க நடை போடும் நாயின்
மேனாமினுக்கியை வாலாக்கி
சுருட்டியிருக்கிறேன்
நரம்பறுத்து திரிகிறது ஆசை
நாவறுத்துக் குதிக்கிறது பேராசை
விழி தோண்டி விலா எலும்பும்
நொறுங்க சிரிக்கிறது விதி
தனிமையில் தவழும் நாலு கால்
பாய்ச்சலில் சுயத்தின் அரிப்பு
நந்தவனத் தேருக்குள் நயமாய் பேசிய
அவளை கடவுளாக்கி
காசு கொடுக்கிறேன்
தவறோ சரியோ போர்வைக்குள்
வியர்வை முட்டும் குறுக்கு சந்துகள்
கால் விரிக்கலாம்
நுங்கு கண்களின் ஓட்டையிலும்
பெருவிரலுக்கு மட்டும் வயசாவதில்லை
மற்றபடி நோண்டி நொங்கெடுக்கிறது
மற்றவை.....!

- கவிஜி

Pin It