பால்ய வயது அது
தெருவுக்குத் தெரு இதே பேச்சு தா
ஆக்ஸிடன்டுல அடிபட்டு
பாத்து பாக்காத மாறிப் போன
எத்தனையோ பேரால செத்த
சத்தி பத்தி தா

அடிபட்டு செத்ததால
ஊரு எல்லைலயே வச்சு அழுது எரிச்சுட்டாங்க
மூனு மாசம் அடப்பு
ஆறு மாசம் அவிட்டமாம்
காத்தோட காத்தா பரவுச்சு புரளி
பளிங்கிக்குப் போயி மந்துருச்சு கட்டு
தர்காவுக்குப் போயி மந்துருச்சு ஊரச் சுத்தி தெளிச்சு விடு
இழவு வீட்டில் சொம்புத் தண்ணி வச்சு அழப் போனவர்கள் அறிவுரை
வீட்டில் கட்டியும் காடு மேடு எல்லாம் தெளித்தும்
'ஏ கனவுல பாத்தே..
அந்த ஓடைகிட்ட பாத்தே..
இராத்திரி ஒன்னுக்கடிக்க வெளிய வரவே பயமா கெடக்கு...'
இன்னும் எவ்வளவோ அரசல் புரசலா பேசுறாங்கனு
எதுத்த வீட்டு சண்டக்காரி
பக்கத்து வீட்டுக்காரிகிட்ட சொன்னா
என்னைக்கு புருசனுக்கு சோறு ஊத்தாத பொண்டாடி பரிமாறிட்டே சொல்றா..
எருக்கலை நார திருச்சுக் கட்டனா காத்து கருப்பு எதுவு கண்ணுல காட்டாதுனு கட்டியு

யார்டயு பேசாம கம்முனு தெளிச்சுருக்கனு
சுத்தமா குளிச்சுட்டு போயிருக்கனு
பிறங்காலு கூட ஒழுங்கா கழுவாக போயிருப்பா..
வசை புரளி புரணி ஓயல...
இழப்பை நினைத்து அழுவதா
ஊர் வாயை நினைத்து அழுவதா
யாரு யாருக்கோ தெய்படுற மாதிரி இவளுக்கு மட்டு ஏ தென்படலனு
தெம்பில்லாம ஆறுதலற்று ஆசுவாசமற்று துடிக்குது
ரெண்டு மாச கைக்குழந்தையின் தாய் மனசு

- அ.ஜோதிமணி, பெத்தாம்பட்டி

Pin It