எனக்கொரு (கெட்ட/நல்ல)
பழக்கம்
குழந்தைகளைக் கண்டால்
சிகப்பு பலூன்களைத் தருவேன்.
எப்போதும்
என் ஜோல்னா பை
சிகப்பு பலூன்களால்
நிறைந்திருந்தன.
அதற்கான செலவில் மனைவியின் கோபமும் சேர்ந்திருந்தது
நண்பர்கள்
தெரிந்தவர்கள்
வீட்டின் குழந்தைகளுக்கு
மாமர இலைகளில் வழியும் மழை நீர்த்துளிகள் போல்
மகிழ்ச்சிதான்
சில நேரம்
பெரியவர்களுக்கும் கொடுப்பேன்
ஆனால் எனக்கு அச்செயல் நிறைவளித்ததில்லை
எல்லோர் வீட்டிலும் பலூன்கள் கட்டும்
பழக்கம் மறந்தாலும்
நான் சிகப்பு பலூன்களை
கொடுப்பதை
நிறுத்தப் போவதில்லை
என் உயிர் மூச்சை நிரப்பித்தான் கொடுப்பேன்
எனக்கு தந்தது போலவே…..

- துவாரகா சாமிநாதன்

Pin It