ஒருமுறை சொன்னதை
மறுமுறை சொல்லப்
பிடிக்காது உனக்கு.

திரும்பத் திரும்ப
நீ கூறக்
கேட்பது பிடிக்கும் எனக்கு.

இப்படித்தான் இருக்கிறது
பிடித்தும் பிடிக்காமலும்
நாம் நடிக்கும் இந்த வாழ்க்கை.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It