இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை
இழப்பதற்கு ஒரு காரணமுமில்லை

இழப்பிற்காக துக்கிக்கவும் இல்லை
இழப்பிற்கு நான் ஒரு காரணமுமில்லை

இறந்த பொழுதுகளின் சுடுவடுகள்
இன்றும் எண்ணத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது போனால்
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை

எந்த ஒரு காரணமின்றி இழப்பதற்கு
என்னிடத்தில் சிலவைகள்
முதுகில் சுமையாய் தொடர்வதை விரும்பவில்லை
அவற்றை இழப்பதனால்

என் வாழ்வில்
இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை

- இல.பிரகாசம்

Pin It